Thursday, 5 April 2012


பாலமதி முருகன் கோயில் ....



இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் அற்புத மலையாக காட்சி தரும் பாலமதி மலை,  கோட்டை மாநகர் என புகழப்பெரும்  வேலூரில்  ஆரணி சாலையில் ஓட்டேரி முத்துரங்கம் அரசினர்  கலை கல்லுரியை கடந்து 8  கிலோமீட்டர் அழகான கொண்டைஊசி வளைவுகள் கொண்ட மலை பாதையில் மலை உச்சியை அடைகிறது, அங்குதான் அழகிய தோற்றத்துடன் வானளாவிய மஞ்சள் நிற கோபுரம் நம்மை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்து  இருக்கிறது குழந்தை வேலையுதபாணி திருக்கோவில்,

 குறிஞ்சி நிலதெய்வமான முருகபெருமான், வேலேந்திய குழந்தையாக காட்சி தருவதால் குழந்தை வேலையுதபாணி எனும் பெயரால் இம்மலையில் அருளாட்சி புரிகின்றார்.


 மலை உச்சியை அடைந்ததும் அம்மலை மீது ஒரு சிறிய குன்றின்மீது அமைந்து உள்ள ஆலயத்திற்கு செல்ல அழகிய படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது ஆலய கருவறைக்குள் நுழையும் முன் கருவறையின் வலப்பக்கம் வலம்புரி விநாயகரும் இடப்புறம் விசிறி  சுவாமிகள் இருகரம் உயர்த்தி ஆசி வழங்கியபடி வரவேற்கிறார்கள்

 கருவறையினுள் நுழையும் போதே குழந்தை வேலையுதபணி எனும்பெயர்கொண்டு முருகபெருமானின் தரிசனம் நம்மை பக்திபரவசத்தில் ஆழ்த்துகிறது.
 அருணகிரிநாதர் திருப்புகழில் மொழிந்தவாறு

"இருவினை யஞ்ச மலவகை மங்க",
 " இருள்பிணி மங்க ......"
 அதாவது நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய,
மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய,
அஞ்ஞானமும், நோய்களும் அகல",

 பக்திக்கு வித்தான பெருமான் பாம்பன் சுவாமிகள் போற்றி விண்ணப்பம் பாடியருளிபடி

"மதலையாய், குருவாய், தேவர்பதிஎன உளவேல் போற்றி"

 என்பதற்கிணங்க.. குழந்தையாய், தந்தைக்கு பிரணவ மந்திரத்தை  உபதேசித்த குருவாய், தேவர்களை காக்கும் பதியாய் காட்சி அருள்கிறார்.

மூலவரை தரிசித்து பின்னர் உற்சவர் சந்நிதியும் கடந்து பிரகாரத்தை வலம்வரும்பொழுது  இடது புறத்தில் வடக்கை நோக்கிய வண்ணம் அருளாசி வழங்கியபடி அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் திருஞான சம்மந்தர் ஆகியோரும் வீற்றிருக்கிறார்கள்,

பல்லாயிரம்  வருடங்களாக இறைவனை நோக்கி பயணிக்கும் ஆன்மாக்களை வழிநடத்தியும், சிறப்பானதொரு பாதை வகுத்து கொடுத்தது சைவ சித்தாந்தமே,

 மனிதன் என்ற மேன்மையான பிறவியின் நோக்கம் என்ன என்பதை உணர்த்திய அறுபத்தி மூவர் நாயன்மார்களும், பதினெண் சித்தர்களும், மகான்களும் தோன்றி சைவ சித்தாந்தம், ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் உலகிற்கு அறிவித்தவர்கள்.


 இம்மகான்களில் பெரும் சிறப்பு வாய்ந்த அருணகிரிநாதர் , பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாசர், அருட்பெரும்ஜோதி வள்ளல் இராமலிங்க அடிகளார் இவர்களுக்கு தனி மண்டபங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது இவர்களுடன் திருவள்ளுவருக்கும் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு.


மிக பழமை வாய்ந்த இந்த ஆலயம் புதிய பொலிவுடன் திகழ காரணமாக இருப்பவர் இக்கோவிலை நிர்வகித்துவரும் ஸ்ரீ ராமகிருஷ்ண சாது அவர்கள் மிக எளிமையான தோற்றத்துடன் ஒரு துறவிக்குறிய இலக்கணத்துடன் வாழ்ந்து வரும் இவரை பற்றி அடுத்த பதிவில் சந்திப்போம்.

உங்களுக்காக 
ம.பாஸ்கரன்-குருவராஜா பாளையம் 
வேலூர் மாவட்டம் .
   

1 comment: